/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி அரசு பணி ஆணை வழங்கிய தம்பதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
/
போலி அரசு பணி ஆணை வழங்கிய தம்பதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
போலி அரசு பணி ஆணை வழங்கிய தம்பதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
போலி அரசு பணி ஆணை வழங்கிய தம்பதி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
ADDED : ஜன 20, 2025 07:07 AM
போத்தனூர் : கோவை, போலி அரசு பணி ஆணை வழங்கி, மோசடி செய்த தம்பதி மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை, போத்தனூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சக்திவேல், 43. மனைவி ஜெயசித்ரா, 34. சக்திவேல், செட்டிபாளையம் சாலையிலுள்ள பி அண்ட் டி காலனியை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது உறவினர்களிடம், பொதுப்பணித்துறையில் வேலைக்கான போலி ஆணை வழங்கி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். போத்தனூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் வெள்ளலூர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், ஆஸ்டியன் ராஜ்குமார் போத்தனூர் போலீசில் நேற்று ஒரு புகார் அளித்தார்.
அதில் கூறியுள்ளதாவது:
சக்திவேல், பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதால், நண்பருடன் இணைந்து 2023 ஜூன் முதல் செப்., வரை, 18 லட்சம் ரூபாயை, அவரது மனைவி ஜெயசித்ராவிடம் வீட்டுக்கு சென்று கொடுத்தோம். அதன்பின், பணி ஆணை ஒன்றை சக்திவேல் வழங்கினார்.
அதில் வெற்றுக் காகிதம் மட்டுமே இருந்தது. இது குறித்து சக்திவேலிடம் கேட்டபோது, வேறொரு கவரை கொடுத்தார்.
அதிலிருந்த பணி ஆணை குறித்து சென்னை, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது, அது போலியானது என தெரிந்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார், சிறையிலுள்ள கில்லாடி தம்பதி மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.