/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாயில் மீண்டும் கசிவு குடிநீர் விநியோகம் பாதிப்பு
/
குழாயில் மீண்டும் கசிவு குடிநீர் விநியோகம் பாதிப்பு
குழாயில் மீண்டும் கசிவு குடிநீர் விநியோகம் பாதிப்பு
குழாயில் மீண்டும் கசிவு குடிநீர் விநியோகம் பாதிப்பு
ADDED : நவ 19, 2025 03:24 AM
: கோவை: கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. மாநகராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகித்து, 11 நாட்களாகி விட்டதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பில்லுார் -2வது திட்டத்தில் குடிநீர் சப்ளையாகும் குழாயில் அழுத்தம் தாங்காமல், 13ம் தேதி இரவு உடைந்தது. இரு நாட்கள் போராடி, புதிய குழாய் பொருத்தப்பட்டு, 15ம் தேதி இரவு 'பம்ப்' செய்யப்பட்டது. மறுநாள் 16ம் தேதி அழுத்தம் தாங்காமல், ஏற்கனவே உடைந்த இடத்துக்கு அருகாமையில் மீண்டும் உடைந்தது. அப்பகுதியில் குழாய் சீரமைக்கப்பட்டது; அதன்பின்பும் கசிவு ஏற்பட்டதால், நேற்று மீண்டும் வேலை பார்க்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பில்லுார் திட்டத்தில் பதிக்கப்பட்ட பழைய குழாய், 40 ஆண்டுகளாகி விட்டதால், அழுத்தம் தாங்காமல் உடைந்து வருகிறது. அதனால், இரண்டு மோட்டார்கள் மட்டும் இயக்கி, பம்ப் செய்யப்படும். ராமகிருஷ்ணாபுரம் தொட்டிக்கு தண்ணீர் தருவிக்கப்பட்டு, மற்ற இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்' என்றனர்.
மாநகராட்சி வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்து, 11 நாட்களாகி விட்டது. அதனால், பொதுமக்கள் கேன் குடிநீர், லாரி தண்ணீர் வாங்கி, சமாளித்து வருகின்றனர்.

