/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது
/
ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 01, 2025 12:12 PM
கோவை:
கணபதியை சேர்ந்தவர் ஜோஜூ மேத்யூ,51. இவர் ஆன்லைன் வர்த்தக ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, மேத்யூ, பல தவணைகளாக, ரூ.50 லட்சத்தை முதலீடு செய்தார். தன்னை மோசடி செய்தது தெரிய வந்தது.
மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த சிவகுமார், 27, ஓசூரை சேர்ந்த குமரேசன், 29, தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த நித்யா, 32 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதப்பன் என்பவரை, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.