/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப் பன்றிகளின் வரவை தடுக்க இப்படியும் ஒரு யுக்தி
/
காட்டுப் பன்றிகளின் வரவை தடுக்க இப்படியும் ஒரு யுக்தி
காட்டுப் பன்றிகளின் வரவை தடுக்க இப்படியும் ஒரு யுக்தி
காட்டுப் பன்றிகளின் வரவை தடுக்க இப்படியும் ஒரு யுக்தி
ADDED : ஜன 01, 2026 05:12 AM

பெ.நா.பாளையம்: கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காட்டு யானை, காட்டு பன்றிகள், மான், காட்டு மாடு உள்ளிட்டவைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரிப்பதால், வேளாண் பயிர்கள் சேதம் அடைகின்றன.
பன்னீர்மடை அருகே கொண்டைக்கடலை பயிரிட்ட வயலில், காட்டுப் பன்றிகள் அடிக்கடி வந்து மேய்ந்து விடுகின்றன. பெரும் சேதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, கொண்டக்கடலை பயிரிட்ட வயலில், ஆங்காங்கே குச்சிகளை நட்டு, அதில் வெள்ளை நிற பிளாஸ்டிக் காகிதங்களை தொங்க விட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தற்போது, கொண்டைக்கடலை சீசன் என்பதால், அதைத் தேடி காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வருகின்றன. இதை தடுக்க, கொண்டக்கடலை பயிரிட்டு உள்ள வேளாண் நிலத்தில், குச்சிகளை நட்டு, அதில் வெள்ளை நிற பிளாஸ்டிக் காகிதங்களை தொங்கவிட்டுள்ளோம். இதைப் பார்த்து, காட்டு பன்றிகள் வேளாண் நிலங்களுக்குள் வருவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

