/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பரவசம்

ADDED : ஜன 01, 2026 05:12 AM

அன்னூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில், 26ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் மதியம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்கினர்.
நேற்று காலை 7:15 மணிக்கு அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளினார்.
காலை 10: 50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அவிநாசி, வாகிசர் மடம், காமாட்சி தாச ஏகாம்பரநாத சாமிகள், கூனம்பட்டி ஆதினம் ராஜ சரவண மாணிக்கவாசக சாமிகள், அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மன்னீஸ்வரப் பெருமானுக்கு அரோகரா என்று பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பினர். ஓதிமலை ரோடு, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக கோவிலை தேர் அடைந்தது.
விழாவில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், அறங்காவலர்கள் மணி, யசோதா, சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு, குதிரை வாகனத்தில், சுவாமி திருவீதி உலாவும், நாளை இரவு 7:00 மணிக்கு தெப்போற்சவமும் நடக்கிறது.