/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் மதிப்பீட்டு பணி; வரும் 19ம் தேதி விடுமுறை
/
விடைத்தாள் மதிப்பீட்டு பணி; வரும் 19ம் தேதி விடுமுறை
விடைத்தாள் மதிப்பீட்டு பணி; வரும் 19ம் தேதி விடுமுறை
விடைத்தாள் மதிப்பீட்டு பணி; வரும் 19ம் தேதி விடுமுறை
ADDED : ஏப் 17, 2025 07:10 AM
கோவை; பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வரும், 19ம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 3 முதல், 25ம் தேதி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில், 128 மையங்களில், 363 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து, 958 மாணவர்கள் தேர்வு எழுதினர். தவிர, தனித்தேர்வர்கள், 581 பேர் எழுதினர். தொடர்ந்து, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் நகராட்சி பெண்கள் பள்ளியிலும், கோவை கல்வி மாவட்டத்தில் சர்வஜன பள்ளி, அவிலா பள்ளிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.
மூன்று மையங்களிலும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வரும், 18ம் தேதி புனித வெள்ளியும், 20ம் தேதி ஈஸ்டர் என்பதால், அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் முதுகலை பட்ட தாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வரும், 19ம் தேதியும் மதிப்பீட்டு பணிக்கு விடுமுறை அளித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் லதா உத்தரவிட்டுள்ளார்.