/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
/
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ADDED : ஜூன் 12, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கோவையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோவை, தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில், உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.
பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. காந்திபுரத்தில், மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன, என கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் சுபாஷ் சந்திரன் தெரிவித்தார்.