/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவினாசிலிங்கம் பல்கலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
/
அவினாசிலிங்கம் பல்கலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
அவினாசிலிங்கம் பல்கலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
அவினாசிலிங்கம் பல்கலையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
ADDED : நவ 05, 2024 11:27 PM

கோவை ; ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நேற்று நடந்தது. 'நாட்டின் வளமைக்கு தேவை நேர்மை கலாசாரம்' என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற தலைப்பில் கோவை மனித உரிமை மன்ற தலைவர் சாரதி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:
ஊழல் நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குறைத்துவிடும். நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படையச் செய்து தனிநபர், சமூக நல்வாழ்வை சீர்குலைத்துவிடுகிறது. பொது மற்றும் தனியார் துறைகளில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் விழிப்புணர்வு அவசியம்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்பான சமூகத்தை உருவாக்குவதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. ஊழல் குறித்து புகார் அளிக்க தயங்ககூடாது. அதே சமயம், புகார் அளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முதுநிலை மாணவிகள் பங்கேற்று ஊழல் தடுப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றி அசத்தினர். கலை மற்றும் மனிதநேய பிரிவு டீன் ஷோபனா உட்பட பலர் பங்கேற்றனர்.

