/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 30, 2025 11:20 PM

சூலுார்:  பள்ளபாளையம் விவேகானந்தா கல்வி நிலைய மெட்ரிக் பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சூலுார் அடுத்த பள்ளபாளையம்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஊழல் எதிர்ப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி, விவேகானந்த கல்வி நிலைய மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
'ஊழல் எதிர்ப்பு' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
ஏராளமான மாணவர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர். பள்ளி இயக்குனர் சுந்தர நாதன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதாயணி முன்னிலை வகித்தார்.
வங்கி மேலாளர் ராஜ பிரசாத் பங்கேற்று, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஊழலால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஊழலை எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பது என்பதும் குறித்தும் விளக்கினார்.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

