/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி மீது வழக்கு தொடர ஊழல் எதிர்ப்பு இயக்கம் முடிவு
/
மாநகராட்சி மீது வழக்கு தொடர ஊழல் எதிர்ப்பு இயக்கம் முடிவு
மாநகராட்சி மீது வழக்கு தொடர ஊழல் எதிர்ப்பு இயக்கம் முடிவு
மாநகராட்சி மீது வழக்கு தொடர ஊழல் எதிர்ப்பு இயக்கம் முடிவு
ADDED : ஜன 03, 2026 05:13 AM
கோவை: ஆக்கிரமிப்பில் உள்ள, பொது திறந்த வெளி ஒதுக்கீட்டு இடங்களை மீட்டெடுக்க தவறிய, மாநகராட்சி மீது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர, ஊழல் எதிர்ப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வேலு, சென்னை ஐகோர்ட்டில் டபிள்யூ.பி.எண்.1 6539/2021 வழக்கில் கடந்த மாதம் பெற்ற உத்தரவை நடைமுறைப்படுத்த, மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தார்.
அதில் கூறி இருப்பதாவது: பலமுறை எச்சரித்தும், மாநகராட்சிக்கு உட்பட்ட திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்க அதிகாரிகள் தவறியதோடு, ஆண்டுக்கணக்கில் ஆக்கிரமிப்புகள் தொடர துணை போயுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தவறியது, கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தாமல் இழுத்தடித்தது ஆகிய விதிமீறல்களுக்காக, மாநகராட்சி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.
எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களையும் ஒரு மாதத்துக்குள் மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பு காலத்தில், அதன் மூலமாக ஆக்கிரமிப்பாளர்கள் அடைந்த ஆதாயங்களை கணக்கிட்டு, அபராதம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

