தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊழல் தடுப்பு வினாடி – வினா

ஊழல் தடுப்பு வினாடி – வினா

ஊழல் தடுப்பு வினாடி – வினா


UPDATED : நவ 02, 2026 11:26 AM

ADDED : நவ 02, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 11:26 AM ADDED : நவ 02, 2026 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நடந்தது.

இப்போட்டியில், மாணவர்கள் மட்டுமின்றி, நிறுவன ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர். முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் போட்டியை நடத்தினார். முதல்கட்ட போட்டியில், 13 அணிகள் பங்கேற்றதில், ஐந்து அணிகள் இறுதிகட்ட போட்டிக்கு முன்னேறின.

நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, அறநெறி சார்ந்த செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவன இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ், விஞ்ஞானி பேராசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us