திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதற விடக்கூடாது: அதிமுக உஷார்
திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதற விடக்கூடாது: அதிமுக உஷார்
ADDED : ஏப் 01, 2026 08:04 PM
போத்தனூர்:கிணத்துகடவு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. தாமோதரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
கூட்டனி கட்சிகளின் நிர்வாகிகளிடம் அதற்கான அறிமுக கூட்டம் நேற்று மதுக்கரை, மரப்பாலம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், நமது வேட்பாளர் தாமோதரன் அனைத்து தரப்பினரிடமும் எளிதாக பழக கூடியவர். தொகுதியில் நன்கு அறிமுகமானவர். இவரது வெற்றி உறுதி. 50 ஆயிரம் வாக்குகள் லித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, கட்சியினர் பாடுபட வேண்டும்.
ஒவ்வொரு பூத்திலும் குறைந்துபட்சம், 400 ஓட்டுகள் பெற வேண்டும். வீடுதோறும் பெண்கள் பிரசாரம் செய்ய வேண்டும். வீடுதோறும் சென்று தி.மு.க. வினர் சொல்லியும் செய்யாதவை குறித்து மக்களிடம் கூறவேண்டும். நாம் செய்ததை எடுத்துக் கூறவேண்டும்.
தி.மு.க.விற்கு எதிரான ஓட்டுகள் நிறைய இருக்கிரது. அவை சிந்தாமல் சிதறாமல் நமக்கு கிடைக்க செய்யவேண்டும். வேறு யாருக்கும் போக விடக்கூடாது. விஜய் போட்டியிலேயே கிடையாது. மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்காக காத்திருக்கின்றனர். தாமோதரன் வெற்றி பெற்றால். மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும், என்றார்.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சந்திரசேகர், முன்னாள் தலைவர் வசந்தராஜன், அ.ம.மு.க.,வின் ரோகிணி, மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேட்பாளர் தாமோதரன் நன்றி கூறினார்.
பங்கேற்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, தயிர் பச்சடி, தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.
