/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு கொட்ட எதிர்ப்பு டிராக்டர் சிறைபிடிப்பு
/
கழிவு கொட்ட எதிர்ப்பு டிராக்டர் சிறைபிடிப்பு
ADDED : மார் 11, 2026 05:55 AM

போத்தனூர்: ஈச்சனாரி --- செட்டிபாளையம் சாலை சந்திப்பிற்கு செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் அருகே, மலுமிச்சம்பட்டி பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு கொட்டப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் இங்கு தீ பற்றியது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், இன்னும் புகை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் இங்கு குப்பைகழிவு கொட்டிய பஞ்., டிராக்டரை அப்பகுதியினர் சிறைபிடித்தனர்.
அங்கு வந்த பஞ்., செயலர் கார்த்திகேயனிடம், மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கழிவை கொட்டக்கூடாது என கூறினார். இதுகுறித்து பி.டி.ஓ., சுகந்திக்கு தகவல் தெரிவித்தார்.
பி.டி.ஓ., சுகந்தி கூறுகையில், அவ்விடத்தில் பல ஆண்டுகளாக குப்பை கழிவு கொட்டப்படுகிறது. உடனடியாக தீர்வு காண வேண்டி, பஞ்.,களின் உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். மாற்று ஏற்பாடு குறித்து அவர்கள் கூறிய பின், நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

