/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை பொருள் எதிர்ப்பு 'பார்க்' குழுமம் சாதனை
/
போதை பொருள் எதிர்ப்பு 'பார்க்' குழுமம் சாதனை
ADDED : பிப் 08, 2024 11:14 PM

கோவை, -டிஜிட்டல் வடிவில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழியேற்று, பார்க் கல்வி குழுமம் சாதித்துள்ளது.
போதைப்பொருள் விழிப்புணவு ஏற்படுத்த, கோவை மாநகர போலீஸ் மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் இணைந்து, டிஜிட்டல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுமார், 1.12 லட்சம் மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி அனுஷா முன்னிலை வகித்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.இந்த முயற்சியை 'வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன்' என்ற அமைப்பு அங்கீகரித்தது.
மேலும், இதில் பங்கேற்ற கல்லுாரிகளில் இருந்து ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, போதை பொருள் இல்லாத கோவையின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர்.விபரங்களுக்கு http://drugfreekovai.com இணையத் தளத்தை பார்வையிடலாம்.

