/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 28, 2025 06:32 AM
அன்னுார்: பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி அன்னுாரில் நடந்தது.
அன்னுார் பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று முன் தினம் நடந்தது. அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பேரணியை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்துவோம். பிளாஸ்டிக்கால் மண் மலடாகிறது. மீண்டும் மஞ்ச பையை பயன்படுத்துவோம்.
சுற்றுச்சூழலை பாதுகாப்போம். நீர்நிலைகளை பேணி காப்போம், என கோஷம் எழுப்பினர். விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி கோவை ரோடு, மெயின் ரோடு, சத்தி ரோடு வழியாக பேரணி சென்றது.பின்னர் அல்லி குளத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணி செய்யப்பட்டது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி, பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், ரீகம்போஸ் ரீசைக்கிளிங் நிறுவன ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.