/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரையாம்பாளையத்தில் தொடர் திருட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
/
கரையாம்பாளையத்தில் தொடர் திருட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
கரையாம்பாளையத்தில் தொடர் திருட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
கரையாம்பாளையத்தில் தொடர் திருட்டு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்
ADDED : மார் 18, 2025 05:16 AM
சூலுார் : கரையாம்பாளையத்தில் நடக்கும் தொடர் திருட்டு சம்வங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கரையாம்பாளையம். 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, 5க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.
கோவிலிலும் பொருட்கள் திருட முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கோவை மாநகரை ஒட்டி எங்கள் கிராமம் உள்ளதால், தினந்தோறும் புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. கம்பெனிகளும் பல உள்ளதால், தொழிலாளர்கள் ஏராளமானோர் ஊருக்குள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வீடு புகுந்து திருடுவது அதிகரித்துள்ளது 5 வீடுகளில், 20 சவரன் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
போலீசில் புகார் அளித்தும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.. அச்சத்துடனேயே இருக்க வேண்டி உள்ளது. சூலூர் போலீஸ் ஸ்டேஷன் எங்கள் கிராமத்தில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ளது. போலீசாருக்கு உடனுக்குடன் தகவல் அளித்தாலும் அவர்கள் வர காலதாமதம் ஆகிறது.
இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு போலீசாரே வருவதில்லை. அதனால், குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீலம்பூர், மயிலம் பட்டி, கரையாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றம் நடக்காமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.