/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன்கொடுமை, போதை பொருள் தடுப்பு மராத்தான் போட்டி
/
வன்கொடுமை, போதை பொருள் தடுப்பு மராத்தான் போட்டி
ADDED : ஜன 29, 2024 12:28 AM

கோவை:ரோட்டரி கோயம்புத்துார் சிட்டி மற்றும் சி.எம்.எஸ்., வித்யா மந்திர் பள்ளி சார்பில் குழந்தைகள் வன்கொடுமை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் கணபதி, மணியகாரம்பாளையத்தில் நடந்தது.
2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஓட்டத்தை, முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு துவக்கி வைத்தார். 2கிமீ., 3கிமீ., 10கிமீ., என மூன்று பிரிவுகளில் நடந்தது.
முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசுகையில், ''இந்த மராத்தான் போன்று, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளிலும், மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
சி.எம்.எஸ்., நிர்வாக தலைவர் ராமச்சந்திரன், பொது செயலாளர் ராஜகோபாலன், சி.எம்.எஸ்., வித்யா மந்திர் மெட்ரிக்., பள்ளி துணை தலைவர் ஸ்ரீகாந்த் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், மராத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.