/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு
/
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு
அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு
ADDED : ஜூன் 29, 2025 11:32 PM
வால்பாறை; நகரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புக்கடைகளால், மக்கள் நாள் தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின், 22 தள்ளுவண்டி வாகனங்கள் கடந்த 2023ம் ஆண்டு வழங்கப்பட்டன.
இந்த கடைகளை தவிர, சிறுவியாபாரிகள் பலரும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கபட்டுள்ள கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்' என்றனர்.