/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்
/
முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்
முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்
முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்
ADDED : மார் 16, 2025 12:16 AM
கோவை: முதுகலை பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கோரி, கோவை அரசு கலைக் கல்லுாரி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 6,430 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லுாரியில், 23 இளங்கலை, 21 முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளன.
இதுதவிர, 17 பாடங்களில் பி.எச்டி., கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. கல்லுாரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
கூடுதல் படிப்புகளை ஏற்படுத்த, கல்லுாரி உயர்கல்வித் துறையில் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மூன்று பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்புகளை ஏற்படுத்த, கல்லுாரி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் எழிலி கூறுகையில், ''கல்லுாரியில் மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு வருகின்றன. தற்போது தொழில்துறை வணிகம், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., புவியியல் ஆகிய பாடங்களில், முதுகலை படிப்புகள் துவங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. தொழில்துறை வணிகம், எம்.பி.ஏ., பாடங்களில் தலா, 40 இடங்கள், எம்.எஸ்சி., புவியியல் பாடத்துக்கு, 30 இடங்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.