/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 01, 2025 11:31 PM
கோவை; தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாகவுள்ள தற்காலிக மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தின் கீழ் மருந்தாளுநர்கள் 6 பேர், நிலை மூன்று லேப் டெக்னீசியன், செவிலியர்கள் 93 பேர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணி முழுவதும் தற்காலிகமானது.
டிப்ளமோ பார்மசி, இளநிலை பார்மசி அல்லது பார்ம் டி படித்தவர்கள் மருந்தாளுநர் பணிக்கும், லேப் டெக்னீசியன் பணிக்கு பிளஸ்2 முடித்து மெடிக்கல் லேபாரேட்ரி டெக்னாலஜி ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்து இருக்கவேண்டும். இப்பணிக்கு 35 வயது அல்லது அதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செவிலியர் பணிக்கு டிப்ளமோ நர்சிங், பி.எஸ்சி., நர்சிங் கல்வித்தகுதி பெற்று இருக்கவேண்டும். இதற்கு 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை, ஆக., 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.