/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு வேளாண் பல்கலை படிப்புகளுக்கு வரும் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 04, 2025 08:52 PM
- நமது நிருபர் -
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 31,545 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பல்கலை டீன் (வேளாண்மை) வெங்கடேச பழனிசாமி கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு மற்றும் 3 பட்டயப் படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலையில் 3 இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும், ஒருமித்த மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. வேளாண் பல்கலைக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 6,921 இடங்களும், அண்ணாமலை பல்கலையில் 340 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதில், வேளாண் பல்கலையில் மட்டும் 1,240 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மொத்தமாக இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, 31,545 விண்ணப்பங்களும், பட்டயப்படிப்புகளுக்கு 1,690 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
வேளாண் பல்கலையில் பயில, http://tnau.ucanapply.com என்ற இணைய தளம் வாயிலாக வரும் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, வேளாண் பல்கலையை 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், அண்ணாமலை பல்கலையை 98657 03537, 94420 29913 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.