/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேர்முக தேர்வில் பங்கேற்காவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்க வாய்ப்பு
/
நேர்முக தேர்வில் பங்கேற்காவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்க வாய்ப்பு
நேர்முக தேர்வில் பங்கேற்காவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்க வாய்ப்பு
நேர்முக தேர்வில் பங்கேற்காவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்க வாய்ப்பு
ADDED : செப் 04, 2025 11:20 PM
கோவை; கோவை மாவட்ட தொழில் மையம் வாயிலாக, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், கைவினை திட்டம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், தொழில் முன்னோடிகள் திட்டம், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படு கின்றன.
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் இதுவரை, இத்திட்டங்களில் பயன்பெற, 458 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை பரிசீலித்து நேர்முகத் தேர்வு நடத்தி, 206 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
மீதமுள்ளவர்களுக்கு வரும் வாரம் நேர் முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. பதிவு தபால் வாயிலாக அவர்களுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது.
முதல் முறை நேர்முகத் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை என, நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் வகையில், மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடிதம் அனுப்பப்படுகிறது. மூன்று முறையும் நேர்முகத் தேர்வுக்கு வராதவர்கள் விண்ணப்பம் நிராகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உரிய நேரத்தில் நேர் முகத் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.