/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 10, 2024 11:56 PM
கோவை : குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை, ஒவ்வொரு ஆண்டும் திறமையான ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக, 'கற்கை நன்றே' கல்வி ஊக்கத் தொகை திட்டத்தை, செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் குறைந்தது, 80 சதவீதம் மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க விரும்பும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம், பொறியியல் கலை அறிவியல் துறைகளில், கல்லுாரி முதலாண்டு படிக்கும் மாணவர்களும், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமே இல்லாத மாணவர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படுகிறது. வரும் 20ம் தேதிக்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் கூடுதல் தகவல்களை, https://anandachaitanya.org/karkai-nandre/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். விவரங்களுக்கு, 90035 12634, 99943 87233 ஆகிய எண்களில் அழைக்கலாம்.