/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் நீதி குழும தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
/
இளைஞர் நீதி குழும தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
இளைஞர் நீதி குழும தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
இளைஞர் நீதி குழும தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 17, 2024 08:53 PM
கோவை:கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்தில், தலைவர் பதவி காலியாக உள்ளது. மதிப்பூதியம் அடிப்படையில், இப்பதவிக்கு தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது ஏழு ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சமூகவியல் அல்லது சமூக பணி, சட்டம், மனித ஆரோக்கியம், கல்வி மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில், ஏதேனும் பட்டம் பெற்று, தொழில்புரிபவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தகுதிவாய்ந்த நபர்கள், இயக்குனர், சமூக பாதுகாப்பு துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவர்; அரசின் முடிவே இறுதியானது என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.