/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பதவிக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
/
தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பதவிக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பதவிக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
தொலைநிலை கல்வி மைய இயக்குனர் பதவிக்கு இப்போது விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 29, 2024 01:39 AM
கோவை: காலியாக உள்ள தொலைநிலைக் கல்வி மையத்துக்கான இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாரதியார் பல்கலையில் துணைவேந்தர் உட்பட, பல்வேறு முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், காலியாக உள்ள தொலைநிலைக் கல்வி மையத்துக்கான இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்க, பாரதியார் பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள், வரும், அக்., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர், மூன்று ஆண்டுகள் இயக்குனராக பதவி வகிப்பார்.
விண்ணப்பத்துடன் கட்டணமாக, ரூ.600 செலுத்த வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். 'பதிவாளர், பாரதியார் பல்கலை' என்ற பெயரில் கேட்பு வரைவோலையாக கட்டணம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட, 10 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு, பல்கலையின் இணையதளம், https://b-u.ac.in/ ஐ பார்வையிடலாம்.