/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்
/
பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்
பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்
பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 16, 2024 01:41 AM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், செயல்படும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.
இச்சங்கத்தின் அன்றாட பணிகள் மற்றும் பிராணிகள் நலம் சார்ந்த செயல்களை கள அளவில் மேற்கொள்ள, பிராணிகள் வதை தடுப்பு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, கோவை மாவட்டம் முழுவதும் பயணிக்க விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள்; 25 - 45 வயது; இரு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள்; பிராணிகள் நலம் சார்ந்த அடிப்படை விபரங்கள் அறிந்தவர்கள்; கம்ப்யூட்டர் கையாளும் திறன் உடையவர்கள். வாரத்தில் ஆறு நாட்கள் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
இப்பணி தற்காலிகமானது. தொகுப்பூதியமாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன் வரும், 20ம் தேதி மாலை, 5:30 மணிக்குள், கோவை இஸ்மாயில் வீதியில் உள்ள, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் செயல்படும், மண்டல இணை இயக்குனர் அலுவலகத்துக்கு, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பலாம்.
விபரங்களுக்கு, 0422 - 2381 900 என்ற எண்ணுக்கு, தொடர்பு கொள்ளலாம் என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.