/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி நியமனம்
/
கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி நியமனம்
ADDED : ஜன 20, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்திடம், வாடிக்கையாளர்கள் பெறும் கடனை திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில், வராக்கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில் கடன் வசூல் தீர்ப்பாயம் (டி.ஆர்.டி.,) செயல்பட்டு வருகிறது. தீர்ப்பாய நீதிபதி ஓய்வு பெற்றதால், கடந்தாண்டு மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக இருந்தது.
மதுரை தீர்ப்பாய நீதிபதிக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோவை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதியாக, சோமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.