/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் எடுக்க டி.ஆர்.ஓ., நியமனம்
/
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் எடுக்க டி.ஆர்.ஓ., நியமனம்
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் எடுக்க டி.ஆர்.ஓ., நியமனம்
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் எடுக்க டி.ஆர்.ஓ., நியமனம்
ADDED : பிப் 18, 2024 12:29 AM
கோவை:தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, டி.ஆர்.ஓ., அபிராமி நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்திக் கொடுக்க, சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் தனிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், உக்கடம் மேம்பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம், மேற்குப்புறவழிச்சாலை, விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் மேம்பாலம், நீலிக்கோணாம்பாளையம் மேம்பாலப் பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும், சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. சத்தி ரோடு விரிவாக்கத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். டி.ஆர்.ஓ., பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டு இருந்தார். இவருக்கு பதிலாக, திருச்சியில் டி.ஆர்.ஓ.,வாக பணிபுரிந்த அபிராமி நேற்று நியமிக்கப்பட்டார்.