/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோவில் தக்கார் நியமனம்
/
மருதமலை கோவில் தக்கார் நியமனம்
ADDED : ஜூலை 15, 2025 08:54 PM

கோவை; தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மருதமலை முருகன் கோவிலுக்கான அறங்காவலர் குழு, தலைவர் ஜெயக்குமார் தலைமையில் செயல்பட்டது.
இக்குழுவினர் ஏற்பாட்டில், கடந்த ஏப்., மாதம் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக, 184 அடி உயர முருகன் சிலை அடிவாரத்தில் நிறுவப்படுகிறது. திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் அறங்காவலர் குழுவின் பதவி காலம், சமீபத்தில் முடிந்தது. கோவில் நிர்வாக நலன் கருதியும், திருப்பணி எவ்வித தடையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறவும், புதிதாக அறங்காவலர் குழு நியமிக்கும் வரை, அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்து வந்த ஜெயக்குமாரை, அலுவல் சாரா தக்காராக நியமிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.
அதையேற்று, இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 47(1)(சி)-ன் கீழுள்ள காப்புரிமையின்படி, அரசுக்குரிய அதிகாரத்தின் கீழ், தக்காராக ஜெயக்குமாரை, தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.