தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை


ADDED : மே 17, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, : கோவை செஷயர் ஹோம்ஸ், ஹெல்ப் தி பிளைண்ட் பவுண்டேஷன், பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை சார்பில், பார்வைத்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செஷயர் ஹோம்ஸ் செயலாளர் துரைசாமி கூறியதாவது:

செஷயர் ஹோம்ஸ் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான, 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. எட்டு மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி முடிந்த பின் அவர்களுக்கு பி.எஸ்.ஜி., நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.

லென்சிங் பைபர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்பாற்றல் நிதியுதவியால் இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிட வசதியுடன் கூடிய சேவைகள், 40 பேருக்கு வழங்கப்படுகிறது. முதுகு தண்டுவடம், பக்கவாதம், தலைக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு பயிற்சி வழங்குகிறோம். மேலும் விபரங்களுக்கு, 90477 54549, cheshirecoimbatore@gmail.com.

இவ்வாறு, அவர் கூறினார்.

பி.எஸ்.ஜி., சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். லென்சிங் பைபர்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜெயராமன், ஹெல்ப் தி பிளைண்ட் பவுண்டேஷன் நிர்வாகி பொன் மீனாட்சி, செஷயர் ஹோம்ஸ், தலைவர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us