/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
/
சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
ADDED : பிப் 15, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கடந்த ஆண்டு நடந்த குற்றச்சம்பவங்களில், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த 21 போலீசாரை, மாநகர கமிஷனர் சரவண சுந்தர் பாராட்டினார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்ற விவாத கூட்டம் (கிரைம் மீட்டிங்) நடைபெற்றது. இதில், 2024ம் ஆண்டு கஞ்சா, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை பிடித்தும், திருட்டு போன நகைகள், சொத்துக்களை மீட்கவும் சிறப்பாக செயல்பட்ட 21 போலீசாருக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, கமிஷனர் பாராட்டினார்.
கூட்டத்தில், துணை கமிஷனர்கள் சரவணக்குமார், தேவநாதன், சுகாசினி, அசோக் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.