ADDED : மார் 02, 2024 10:30 PM
அ நிறம் | அளவு
கோவை:கோவை மாவட்ட உடற்கல்வி கழகம் சார்பில், ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நேற்று சர்வஜனா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தலைமை வகித்து, ஓய்வு பெறும் ஆசிரியர்களை கவுரவித்தார்.
நடப்பாண்டில் பணி ஓய்வு பெறவுள்ள, 11 உடற்கல்வி ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன், ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். பணியின் போது இறந்த உடற்கல்வி ஆசிரியரின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட உடற்கல்வி கழக தலைவர் முருகேசன், சர்வஜனா மேல்நிலைப்பள்ளி செயலர் நாராயணசாமி, சங்க செயலர் சிபி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
