ADDED : பிப் 03, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை வருவாய் மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவில் பேசிய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், ''அனைத்து உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் உழைப்புக்கு, இந்த பாராட்டு விழா அங்கீகாரம்,'' என்றார்.
மேட்டுப்பாளையம் மகாஜன பள்ளியின் தலைமையாசிரியர் சண்முகசுந்தரம், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக இயக்குனர் பிரியா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
