/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் வளர்க்கும் கண்டக்டருக்கு பாராட்டு விழா
/
மரம் வளர்க்கும் கண்டக்டருக்கு பாராட்டு விழா
ADDED : செப் 27, 2024 11:19 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் யோகநாதன், மரம் அறக்கட்டளை வாயிலாக மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுவரையில், பல லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தும் உள்ளார்.
இவரை ஊக்குவிக்கும் வகையில், பொள்ளாச்சி அனைத்து சமூக நல அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, என்.ஜி.எம்., கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது.
சேவாலயம் அறக்கட்டளை தலைவர் மயில்சாமி, அனைவரையும் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மாணிக்கச் செழியன், தலைமை வகித்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, நினைவுப் பரிசு வழங்கினார்.
கல்லுாரி முதன்மையர் முதல்வர் முத்துக்குமரன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) மகேஸ்வரி, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த் துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.