ADDED : டிச 03, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்,; மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றனர். இந்த மாணவ, மாணவியர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா, பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை வகித்தார்.
முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை துர்கா பரமேஸ்வரி வரவேற்றார். டாக்டர் குருசாமி, வக்கீல் வீரபத்திரன், முன்னாள் மாணவர்கள் பாலுசாமி, இருதயராஜ், மேலாண்மை குழு தலைவர் சிந்து ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.