/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு
/
ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 07, 2025 10:44 PM

கோவை; கோவை மாவட்ட உடற்கல்வி கழகம் சார்பில், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியில் நடந்தது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் பேசுகையில், ''ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரின் பணி அளப்பரியது.
''உடற்கல்வி ஆசிரியர் மிகவும் கண்டிப்புடன் இருந்தால், அப்பள்ளி மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பர். உடற்கல்வி ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது, பள்ளிகளுக்கு இழப்பு தான். அடுத்த தலைமுறை உடற்கல்வி ஆசிரியர்கள், திறம்பட பணிபுரிய வேண்டும்,'' என்றார்.
விழாவில், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பணமுடிப்பு, நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
டி.என்.ஜி.ஆர்., பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணன், பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி செயலாளர் நாராயணசாமி, மாவட்ட உடற்கல்வி கழக அமைப்பு செயலாளர் வெள்ளிங்கிரி, பி.எஸ்.ஜி., பப்ளிக் மழலையர் பள்ளி முதல்வர் வேலுமணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

