தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்


UPDATED : மே 08, 2026 11:41 PM

ADDED : மே 08, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 11:41 PM ADDED : மே 08, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாம் மூலம் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் தேர்வாகும் நபர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், வயது வரம்பில் மேலும் ஒரு ஆண்டு சலுகையும் கிடைக்கும். பயிற்சிக் காலத்தில் உதவித்தொகையும் வழங்கப்படும்.

8, 10, பிளஸ்-2, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களும் தோல்வியடைந்தவர்களும் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94990 55687, 98948 24775, 96980 91915 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us