/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவுசார் மையத்தில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு
/
அறிவுசார் மையத்தில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு
ADDED : செப் 02, 2025 08:48 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில், தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாதந்தோறும் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
இதில், 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 50 சதவீதம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம், 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்வு அக்டோபர், 11ம் தேதி நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள, நகராட்சி நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில், தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 6ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, அறிவுசார் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
அன்னுார், செப். 3- -
நேந்திரன் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
அன்னுார் வட்டாரத்தில், பசூர், தாச பாளையம், குப்பேபாளையம், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி பகுதியில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான அளவில் நேந்திரன் பயிரிடப்பட்டுள்ளது.
இது குறித்து கொங்கு மண்டல விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் முருகசாமி கூறுகையில், ''கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது ஒரு கிலோ நேந்திரன் 60 ரூபாய்க்கு வியாபாரிகள், கொள்முதல் செய்தனர்.
ஆனால் இந்த ஆண்டு தற்போது ஒரு கிலோ வெறும் 21 ரூபாய்க்கு மட்டுமே வாங்குகின்றனர். அதிலும் தண்டுக்கென இரண்டு கிலோ கழித்து விடுகின்றனர். உரம், களையெடுத்தல், பூச்சி மருந்து, வாழை கன்று நடும் செலவு என ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வருடம் பாடுபட்ட பிறகும் எதுவும் மிஞ்சவில்லை. விலை வீழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் ஒரே அடியாக வாழை பயிரிடாமல் காய்கறி மஞ்சள் என மாற்றுப் பயிர்களை பயிரிட வேண்டும்.
வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டதால் தற்போது கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழை ஏற்றுமதிக்கும் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு உதவ வேண்டும்,'' என்றார்.