தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அரண்' பாதுகாப்பு திட்டம் துவக்கம்

 'அரண்' பாதுகாப்பு திட்டம் துவக்கம்

 'அரண்' பாதுகாப்பு திட்டம் துவக்கம்


ADDED : மார் 09, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 'அரண்' என்ற மகளிர் பாதுகாப்பு திட்டத்தை பா.ஜ. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேற்று துவக்கி வைத்தார்.

கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கம், கோவை மக்கள் சேவை மையம் சார்பில், சரவணம்பட்டி குரு அமுதாஸ் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ. எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பேசியதாவது:

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் வரப்பிரசாதமாக இருந்தாலும், மறுபுறம் பெண்களுக்கு பல்வேறு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் உருவாக்கி வருகிறது. அதற்கு இந்த 'அரண்' திட்டம் ஒரு கேடயமாக அமையும்.

விடுதிகளில் தங்கி பணிக்கு செல்லும் மகளிர் பாதுகாப்புக்கு சவால் வரும் போது, அதை எதிர்கொள்ளும் துணிச்சலைத் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். மகளிர் எதிர்கொள்ளும் மனரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, சட்ட ஆலோசனைகளை வழங்குவது இதன் நோக்கம்.

தற்காப்பு கலைகளின் அவசியம் குறித்தும், சைபர் குற்றங்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் வெண்ணிலா, ஜெயந்தி, டாக்டர் மீராகிருஷ்ணன், தன்னம்பிக்கை பேச்சாளர் பிரியா செந்தில் உள்ளிட்ட பலர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us