/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட்டில் கோப்பை வென்ற அரசூர் அணி
/
கிரிக்கெட்டில் கோப்பை வென்ற அரசூர் அணி
ADDED : அக் 26, 2025 08:37 PM

அன்னுார்: அன்னுார் அருகே வடக்கலூரில், ஐ.சி.எஸ்., ஸ்போர்ட்ஸ் அகாடமியில், மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் மேட்டுப்பாளையம், காந்திபுரம், காரமடை, அரசூர், சரவணம்பட்டி பகுதியில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்றன,
இறுதிப் போட்டியில் அரசூர் ஜாலி ரோவர் அணி முதலில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவர்களில், 229 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய சரவணம்பட்டி சாம் அகாடமி அணி, 34 ஓவர்களில், 88 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜாலி ரோவர் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. சாம் அகாடமி அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.சி.எஸ்., சேர்மன் சரண் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரர், பவுலர் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

