ADDED : டிச 18, 2025 05:02 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: குறிச்சி அரவான் திருவிழா இரண்டாண்டுகள் இடைவெளிக்கு பின், நேற்று முன்தினம் துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.
இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு, ஊர் பெரிய தனக்காரர்கள் முன்னிலையில், ஊர் எல்லை கட்டும் விதமாக, அய்யர் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப், குறிச்சி விநாயகர் கோவில், காந்திஜி சாலை சுப்ரமணியர் கோவில், பாதாள கண்டியம்மன் கோவில் பகுதிகளில் பூசணி உடைக்கப்பட்டது.
தொடர்ந்து, புண்யாஹவனம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக கம்பம் நட்டு, பூவோடு வைத்து அக்னி வளர்க்கப்பட்டது. நிறைவாக அரவான் உயிருக்கு பூஜை நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளும் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தன. நேற்று முதல் கம்பம் சுற்றி விளையாடுதல் துவங்கியது; 22 வரை நடக்கிறது.
