/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரவான் திருக்கல்யாண திருவிழா மேள தாளம் முழங்க குதுாகலம்
/
அரவான் திருக்கல்யாண திருவிழா மேள தாளம் முழங்க குதுாகலம்
அரவான் திருக்கல்யாண திருவிழா மேள தாளம் முழங்க குதுாகலம்
அரவான் திருக்கல்யாண திருவிழா மேள தாளம் முழங்க குதுாகலம்
ADDED : நவ 16, 2025 01:01 AM

கோவை: அரவான் திருக்கல்யாண திருவிழா சிங்காநல்லுார், நீலிக்கோனாம்பாளையம் மற்றும் கள்ளிமடை ஆகிய பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. கடந்த, 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 4ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, நீலிக்கோனாம்பாளையம் மூலஸ்தானத்தில் அத்தி நார் கொண்டு அரவான் திரு உருவம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, சுவாமி திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக பூஜையும் இடம்பெற்றது. 12ம் தேதி அரவான் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நலங்கிட்டு சிங்காநல்லுார் புறப்பட்டு சென்றது. மாப்பிள்ளை அழைப்பின்போது அரவானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரவு, 8:00 மணிக்கு திருக்கல்யாண நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் இரவு நீராட கங்கைக்கு புறப்பட்ட சுவாமிக்கு, கள்ளிமடை காமாட்சியம்மன் மாலை பெறப்பட்டு அணிவிக்கப்பட்டது. மாலை பெறும் நிகழ்ச்சியில் மேள தாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் கள்ளிமடை மக்கள் விழாவை கொண்டாடினர்.
அன்னதானமும் வழங்கப்பட்டது. சுவாமி திருவீதி உலாவின்போது, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வாண வேடிக்கையும் விழாவை வண்ணமயமாக்கியது. கட்டுரம், களப்பலி அடுத்து வரும், 18ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

