/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
/
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
அமராவதி நதிக்கரையில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
ADDED : பிப் 18, 2025 06:52 AM

உடுமலை: உடுமலை அருகே அமராவதி நதிக்கரையில், இரண்டடுக்கு கற்திட்டை, கற்கோடாரி, பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. விரிவான அகழாய்வு செய்ய வேண்டும், என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி நதிக்கரையில், குமணன் துறை, மாரக்கா பாறை பகுதியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் (ஓய்வு) மூர்த்தீஸ்வரி தலைமையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தைச்சேர்ந்த அருட்செல்வன், சிவக்குமார், பிரதீப், ராஜாராம் உள்ளிட்டோர் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் மூர்த்திஸ்வரி கூறியவதாவது:
ஆண்பொருநை எனப்படும் அமராவதி நதிக்கரையில், 2 ஆயிரம் ஆண்டு பழமையான நதிக்கரை நாகரீகம் இருந்ததும், கரை வழி நாடுகள், ராஜ,ராஜ வள நாடுகள் இருந்ததற்கான சான்றுகள், கடையேழு வள்ளல்களுக்கு பிறகு குமணன் என்ற மன்னன் ஆட்சி செய்தது உள்ளிட்ட வரலாறுகள் கல்வெட்டுக்கள், சங்க கால பாடல்கள் வாயிலாக உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு, குருவிக்களத்திற்கும், குமணன் துறைக்கு அருகில் மாராக்கா பாறை என்ற இடத்தில், கோவில் மேடு என இப்பகுதி மக்களால் அறியப்படும் பகுதியில், 20 வரிகளுக்கு மேல் உள்ள கல்வெட்டும், 'ஸ்லஸ்ஸ்ரீ' என்னும் எழுத்தோடு துவங்கி, அரசர்களை பற்றியும், நில தானங்கள் குறித்த தகவல்களும் உள்ளன.
மேலும், பெரிய அளவிலான கற் திட்டைகளும், உள்ளே முதுமக்கள் தாழி இருப்பதற்கான கருப்பு, சிவப்பு வண்ண ஓடுகளும் காணப்படுகிறது.
மேலும், கற்துாண்களும்,பெருங்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட, 15 இன்ச் அகலம், 3 இன்ச் நீளத்தில், பெரிய செங்கற்களும் அதிகளவு காணப்படுகிறது.
பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள், அவற்றை இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் அகழாய்வு செய்தால், ஏராளமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.

