தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாலாங்குளத்தில் நடந்த கட்டடக்கலை கண்காட்சி

வாலாங்குளத்தில் நடந்த கட்டடக்கலை கண்காட்சி

வாலாங்குளத்தில் நடந்த கட்டடக்கலை கண்காட்சி


ADDED : அக் 26, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: உலக கட்டடக்கலை தினத்தை முன்னிட்டு, இந்திய கட்டடக்கலை வல்லுநர் குழுமம் கோவை மையம் சார்பில், வாலாங்குளத்தில் கட்டடக்கலை (ஆர்க்கிடெக்சர்) குறித்த புகைப்படக் கண்காட்சி நேற்று நடந்தது.

கண்காட்சியை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பிரிக்கால் குழும நிறுவனர் விஜய் மோகன் துவக்கி வைத்தனர். கண்காட்சியில், கோவை மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த சிறந்த கட்டடக்கலை கட்டமைப்புகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்வேறு பிரிவுகளின் கீழ் காட்சிப்படுத்தப்பட்ட கட்டடக்கலை குறித்த புகைப்படங்கள், விளக்கங்களை பார்வையாளர்கள் ரசித்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு, எனக்குப் பிடித்த நினைவுச் சின்னம், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் என்ற இரு தலைப்புகளின் கீழ் நடந்த ஓவியப்போட்டிகளில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, இளம் கட்டடக்கலை வல்லுநர்களின் பணிகளைப் பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்திய கட்டடக் கலை (ஐ.ஐ.ஏ.,) கோவை மைய செயலாளர் கமலஹாசன் கூறுகையில், “கட்டடக்கலை, அதன் தேவை குறித்து, மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

கோவை கிளை தலைவர், மமூன் ரஷீத், துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us