நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் இருநாட்கள் நடக்கும் கட்டடக்கலை கண்காட்சி இன்று துவங்குகிறது.
கண்காட்சியை நகராட்சி தலைவர் சியாளமா துவக்கி வைக்கிறார். பொள்ளாச்சி ப்ரைட் அரிமா சங்க நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
புதிதாக வீடு கட்ட விரும்புவோர், வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கான கட்டுமான துறை கண்காட்சியாகும்.
வீட்டுமனை விற்பனை செய்வோர், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள், உள் அலங்காரம், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்வோர், வீட்டு கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் என, 60க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுகின்றன. ஏற்பாடுகளை ஓமேகா ஈவென்ட்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ்குமார் செய்திருக்கிறார்.