/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடை செய்த மருந்துகள் விற்கப்படுகிறதா? கண்டறிந்து தடுக்க ஆய்வு
/
தடை செய்த மருந்துகள் விற்கப்படுகிறதா? கண்டறிந்து தடுக்க ஆய்வு
தடை செய்த மருந்துகள் விற்கப்படுகிறதா? கண்டறிந்து தடுக்க ஆய்வு
தடை செய்த மருந்துகள் விற்கப்படுகிறதா? கண்டறிந்து தடுக்க ஆய்வு
ADDED : ஏப் 11, 2025 10:22 PM
பொள்ளாச்சி, ;மருந்து கடைகளில், குளோரெம்பினிகால் அல்லது நைட்ரோப்யூரான் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து தடுக்க, மருந்தக ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு, ஊட்டச்சத்து அளிப்பதற்காக, 'குளோரெம்பினிகால்' அல்லது 'நைட்ரோப்யூரான்' என்ற மருந்து செலுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடுவோருக்கு, இம்மருந்துகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது, பல்வேறு ஆய்வுகள் வாயிலாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு, 'குளோரெம்பினிகால் அல்லது நைட்ரோப்யூரான்' என்ற மருந்தை செலுத்த, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது. மேலும், இந்த மருந்துகளை இறக்குமதி, உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்தவும் தடையுள்ளது.
அவ்வகையில், இம்மருந்துகள் பயன்பாட்டில் உள்ளதா என, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையினர், மருந்து கடைகள்தோறும் ஆய்வு நடத்தியும் வருகின்றனர்.
பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில், அதிகப்படியான கால்நடை வளர்ப்போர் உள்ள நிலையில், விவசாயிகள் மற்றும் மருந்துக் கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது: 'குளோரெம்பினிகால்' அல்லது 'நைட்ரோப்யூரான்' என்ற மருந்து செலுத்தப்பட்ட இறைச்சியை உண்பதன் வாயிலாக, மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றால் தடைபடும்.
அதை கருத்தில் கொண்டு, இவ்வகைய மருந்துகளை கால்நடை பண்ணைகளில் பயன்படுத்த வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வகைய மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.