/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தையில் விற்கப்படுவது அசல் பால் பொருட்களா?
/
சந்தையில் விற்கப்படுவது அசல் பால் பொருட்களா?
ADDED : மார் 23, 2025 11:45 PM
கோவை : பால் அல்லாமல் வேறு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகளுக்கு, 'பால் சார்ந்த உணவு பொருட்கள்' என்றுஸ்டிக்கரில் வெளியிடக்கூடாது என, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பாலில் இருந்து தயாரிக்கப்படும், பல்வேறு உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில உணவு பொருட்கள், பால் அல்லாமல் தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய், தேங்காய்ப்பால், சோயா பால் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
அவ்வாறு தயாரிக்கப்படும் இனிப்புகள், பிஸ்கட் பிற உணவு பொருட்கள், பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதாகவும், பாலில் உள்ள சத்துக்கள் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
இப்பொருட்களும், பால்மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை போன்ற சுவை, நிறங்களை கொண்டுள்ளன. இதனால், பொதுமக்கள் பால் பொருட்கள் என உட்கொள்கின்றனர்.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தர விதிமுறைகளின் படி, பாலில் இருந்து தயாரிக்கப்படாத எந்த ஒரு பொருட்களிலும், 'பால்' அல்லது 'பால் பொருட்கள்' என குறிப்பிடக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பால் சார்ந்த அனைத்து பொருட்களையும் ஆய்வு செய்ய, அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பிற ஆய்வுகளின் போது, பால் சார்ந்த பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.