/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்களில் பட்டாசு இருக்கா...? போலீசார் 'ஸ்கேன்' சோதனை
/
ரயில்களில் பட்டாசு இருக்கா...? போலீசார் 'ஸ்கேன்' சோதனை
ரயில்களில் பட்டாசு இருக்கா...? போலீசார் 'ஸ்கேன்' சோதனை
ரயில்களில் பட்டாசு இருக்கா...? போலீசார் 'ஸ்கேன்' சோதனை
ADDED : அக் 26, 2024 11:29 PM

கோவை: பயணிகள் ரயிலில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க, ரயில்நிலையத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி,ரயில்களில் பட்டாசு பாக்கெட்கள், பல வகை வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ் போன்றவற்றை, பயணிகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து, சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று கோவை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் கொண்டு வந்த உடமைகளை நுழைவாயில் அருகே வைத்து, ஸ்கேன் செய்து சோதனை செய்தனர்.
ரயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட்பாரங்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை, மோப்ப நாய் உதவியுடன், காவல்துறையினர் சோதனை செய்தனர்.