/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளமா கேட்குறே? ஜிம் பயிற்சியாளருக்கு அடி, உதை
/
சம்பளமா கேட்குறே? ஜிம் பயிற்சியாளருக்கு அடி, உதை
ADDED : ஜூலை 27, 2025 01:11 AM
கோவை: செய்த வேலைக்கு சம்பளம் கேட்ட ஜிம் பயிற்சியாளரை தாக்கிய உரிமையாளர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணபதி, டெக்ஸ்டூல் பகுதியில் வசித்து வருபவர் சத்யகண்ணன்,25; அதே பகுதி கட்டபொம்மன் வீதியிலுள்ள பவர் ஜிம்மில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
ஆனால், அவருக்கு ஜிம் உரிமையாளர் சம்பளம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். ஜிம் உரிமையாளர் பெரியசாமியை சந்தித்து சம்பளம் கேட்ட போது, மூன்று பேர் சேர்ந்து சத்யகண்ணனை அடித்து, உதைத்து தகாத வார்த்தையால் திட்டினர்.
காயமடைந்த சத்யகண்ணன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் விசாரித்து, பெரியசாமி உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.