/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எங்களுடன் விவாதிக்க தயாரா? மேயருக்கு அ.தி.மு.க. சவால்
/
எங்களுடன் விவாதிக்க தயாரா? மேயருக்கு அ.தி.மு.க. சவால்
எங்களுடன் விவாதிக்க தயாரா? மேயருக்கு அ.தி.மு.க. சவால்
எங்களுடன் விவாதிக்க தயாரா? மேயருக்கு அ.தி.மு.க. சவால்
ADDED : ஆக 29, 2025 10:24 PM
கோவை; கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த கூட்டத்துக்கு, 'கோவை மாநகரை குப்பை கிடங்கு ஆக்காதே' என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன், அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் வந்தனர்.
பின், நிருபர்களிடம் பிரபாகரன் கூறியதாவது:
நான்கு ஆண்டு தி.மு.க.ஆட்சியில், மாநகராட்சி பகுதிகளைகுப்பைமேடாக்கும் வேலையை செய்துள்ளனர். இதனால், கோவைக்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை. திருப்பூரில் இருந்து வெள்ளலுார் கிடங்குக்கு குப்பை கொண்டு வந்து, 'பயோ காஸ்' தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளனர்.
கோவை மாநகரை குப்பை மேடாக்கக் கூடாது. வெள்ளலுார் குப்பை கிடங்கு விஷயத்தில், மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த, நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.கோவையில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மேயர், எங்களிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?
இவ்வாறு, அவர் கூறினார்.